
நாட்டில் பொலிஸார் புதிதாக விசேட வேலைத்திட்டம் ஒன்றினை தொடங்கியுள்ளனர்.
பண்டிகை காலத்தில் போக்குவரத்துக்கு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையிலே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறாமல் நடக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.