அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். அவரது வெற்றிடத்துக்கு பொது நிர்வாக அமைச்சு இப்பதில் நியமனத்தை வழங்கியுள்ளது.
பாண்டிருப்பைச் சேர்ந்த வே.ஜெகதீசன், முன்னதாக ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக பணியாற்றி, இறுதியாக 2019இல் பதவியுர்வு பெற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்திருந்தார்.
மேலும் வே.ஜெகதீசன், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியுமாவார்.