300 கிலோவுக்கும் அதிக எடையுடைய கடலாமை ஒன்றைப் பிடிதது வந்த மீனவர் ஒருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ள நிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று அதனை குறிகாட்டுவான் கடலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையை உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரே முன்னெடுத்திருந்தனர்.
