தண்டப்பணம் அறவிடும் முறைகளில் வருகிறது  மாற்றம்!

வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்வதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக , “SPOT PAID” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முறையின் மூலம் தண்டப்பணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தமது கடன்அட்டை அல்லது வேறு முறையில் தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வாகன அனுமதிப்பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சாரதியொருவர் தவறிழைக்கும்போது அவரது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தால் ஓரளவு விபத்துகளை குறைக்க முடியுமெனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal