
தமிழகத்தில் கூனூரில் இடம்பெற்ற உலங்குவனூர்தி விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ஒரு பிரிகேடியர் என மூன்று பேரின் உடல்களுக்கு, அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி , ராகுல் காந்தி, உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் மகள்கள் – கிருத்திகா மற்றும் தாரிணி – தங்கள் பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகளை 5/11 கோர்க்கா ரைபிள்ஸ் பிரிவு கவனித்து வருகிறது. இதேவேளை முழு அரசு மரியாதையுடன் பிபின் ராவத் இறுதிச் சடங்குகள் இடம்பெறுமென இந்திய மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய முப்படைத்தளபதி மரணம்; டெல்லி சென்றார் சவேந்திர சில்வா
