
செவனக்கல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் சேதத்தில் 22 வீடுகள், இரண்டு கோழிப்பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவனக்கல பிரதேச செயலாளர் ஆர்.பி.என்.ஆர் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கி 5000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மின்னல் தாக்கியதில் நான்கு வீடுகளின் மின்சார கட்டமைப்புகள் செயழிலந்துள்ளன.
இவ்வாறு சேதமடைந்த வீடுகள், சொத்துகள், கோழி பண்ணைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.