
சந்தையில் ஒரு லீற்றர் உடனடிப் பாலின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை ஒரு மாத காலத்தில் 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை தனியார் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், திரவ பால் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் சில நிறுவனங்கள் தரமற்ற பசும்பாலை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து தொழிற்சாலைகளில் தண்ணீரில் கலந்து தரம் குறைத்து சந்தைக்கு விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.