
நாட்டின் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களே இவ்வாறு இழுத்து செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையானது இன்றைய தினம் முதல் தொடங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.