
முல்லைத்தீவில் தீர்த்தக்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது முல்லைத்தீவு கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன மூன்று நபர்களில் ஒருவரான தனுஜன் என கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் சிக்கி விஜயகுமாரின் தர்சன் , சிவலிங்கம் சமிழன் மற்றும் மனோகரன் தனுஷன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.