இராகவேந்திரன்

வடிவேலு: “இப்படி மாசக்கணக்குல #ஊரடங்கை போட்டு வச்சிருக்கிங்களே எங்க அக்கவுன்டுக்கு மாசம் ஒரு 15000 ரூபாய் போட்டுவிடலாம்ல”
சத்யராஜ்: இப்ப ஊரடங்கு போடலன்னா நீ பைக்கை எடுத்துட்டு இங்கயும் அங்கயும் சுத்தறதுக்கு பெட்ரோல் செலவு வாரத்துக்கு 300 ரூபான்னா மாசத்துக்கு ஒரு 1200 போட்டுக்க…
அப்புறம் முடி வெட்ட உனக்கு 200 உன் பையனுக்கு 100 மாசத்துல 4 ஷேவிங் பண்ண 200 ஆகமொத்தம் 500
மாசத்துக்கு 2 சினிமாவுக்கு போயி அங்க கேன்டீன்ல நீ குடும்பத்தோட வாங்கி திங்கற பப்ஸ் பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் இந்த கணக்குல ஒரு 3000
மாசத்துல நாலு நாள் நீ ஓட்டலுக்கு போயி மசாலா தோசை பிரியாணி பிரைட் ரைஸ் வாங்கி தின்ற கணக்குல ஒரு 3000
அப்புறம் சொந்தக்காரன் கல்யாணம் காதுகுத்துன்னு போயி மூக்குபுடிக்க தின்னுட்டு மொய் வச்சிட்டு வர்ற கணக்குல ஒரு 2000
பசங்களை கூட்டிகிட்டு பார்க் பீச்சுனு சுத்திட்டு வர்ற கணக்குல ஒரு 2000
அப்புறம் நீ டெய்லி டாஸ்மாக் போயி சரக்கு சைட்டிஷ் வாட்டர் கிளாஸ்னு வாங்க செலவு மாசம் ஒரு 10000
ஆகமொத்தம் இந்த மாசம் உனக்கு மிச்சமானது 21700 அதுல நீ கேட்ட 15000 -த்தை எடுத்துகிட்டு மிச்சம் 6700 -ஐ ஒழுங்கா கொரானா நிவாரண நிதி கணக்குக்கு அனுப்பீடு “.