காக்கை ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம். ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ சக்தி நிறையவே இருக்கின்றது.
மனிதர்களை விட பல மடங்கு உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய உயிரினம் தான் இந்த காகம். நம்முடைய இந்து சாஸ்திரப்படி காகம் நம்முடைய முன்னோர்களாக கருதப்படுகிறது. இந்த காகத்தை பற்றிய சில அரிதான புத்தம்புதிய விஷயங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பொதுவாக மற்ற பறவைகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் வீதியில் இறந்து கிடப்பதை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த காகம் அப்படி எல்லா இடங்களிலும் இறந்தபடி இருக்காது. அரிதாக சில இடங்களில் பார்க்கலாம். ஆனாலும் கூட்டம் கூட்டமாக பெரிய பெரிய ஆல மரத்தின் மேல் கூடு கட்டி வாழக்கூடிய நூற்றுக்கணக்கான காக்கைகள் எங்கு சென்று இறக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது.
நம் வீட்டின் அருகில் பெரிய மரம் இருந்தால் அங்கே நூற்றுக்கணக்கான காகங்களை பார்க்கலாம். அந்த காகங்கள் எல்லாம் எப்படி உயிர் விடுகின்றன என்று நாம் என்றாவது சிந்தித்து இருக்கின்றோமா.
காகத்திற்கு, தான் உயிர் விடக்கூடிய நேரம் எப்போது வரும் என்பது முன்கூட்டியே தெரிய வருமாம். அப்போது அது அடர்ந்த காடுகளுக்குள் சென்று தனக்குத் தானே ஒரு கூடு அமைத்துக் கொண்டு ஜீவசமாதி அடைந்துவிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இப்படி ஒரு அற்புத சக்தி வாய்ந்த இந்த காகத்திற்கு தினம் தோறும் உணவு வைப்பவன் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புகளை பெறுவான் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமே கிடையாது.
இனி காகத்திற்கு நீங்கள் உணவு வைத்தால் இந்த விஷயத்தை கவனித்து பாருங்கள். தினமும் நீங்கள் காகத்திற்கு உணவு வைக்கும் போது அந்த காகம் சந்தோஷமாக அந்த உணவை எடுத்துவிட்டு, உணவு வைத்த வரை ஒரு முறை பார்த்து விட்டு தான் பறந்து செல்லும். பொதுவாக தெரியாத இடத்தில், அதாவது முன் பின் பழக்கம் இல்லாத இடத்தில் உணவு வைத்தால் காகம் அவ்வளவு எளிதில் வந்து எடுக்காது.
தினமும் சாப்பாடு வைத்து பழகி விட்டால் சாதத்தை வைத்த உடனேயே காகம் கூப்பிடாமலே வந்து அந்த சாதத்தை எடுத்து சாப்பிட்டு விடும். (அப்போது சாதத்தை வைத்த உங்களுடைய மனதில் ஒரு திருப்தி ஏற்படும் பாருங்கள். அதை சொல்வதற்கு வார்த்தை கிடையாது. இதை நிறைய பேர் உணர்ந்தும் இருப்பீர்கள்.)
இப்படி நாம் வைக்கக்கூடிய சாதத்தை தினமும் வந்து எடுக்கக்கூடிய அந்த காகமானது நமக்கு சில நல்ல சகுனங்களையும் அறிவுறுத்தும். சில சமயம், சில கெட்ட சகுனங்களையும் தெரியப்படுத்தும். உதாரணத்திற்கு நம்முடைய ஜன்னல் பக்கத்திலோ அல்லது வாசலிலோ காகம் வந்து கா கா என்று அழைத்தால் உறவினர்கள் வருவதாக அர்த்தம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதே போல் தான் இதுவும்.
அன்றாடம் வந்து சாதம் எடுக்கக்கூடிய காகம் திடீரென்று ஒரு நாள் நீங்கள் வைத்த சாதத்தை எடுக்க வரவில்லை. அப்படியே சாதம் வைத்தவுடன் காகம் வந்தாலும், அந்த சாதத்தின் அருகில் அமர்ந்து கொண்டு உங்களைப் பார்த்து சத்தம் எழுப்பிக் கொண்டுதான் எடுக்கும். அந்த சாதத்தை எடுக்காது. அப்போது உங்களுக்கு ஏதோ ஒரு எதிர்பாராத குழப்பம், எதிர்பாராத பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உங்களுக்கு அறிவுறுத்துவதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாகவே இறந்தவர்கள் வீட்டில், இறந்தவர்களுக்கு உணவை வைத்து படைத்து, சாமி கும்பிட்ட பிறகு அந்த சாப்பாட்டை கொண்டு போய் முதலில் காகத்திற்கு தான் வைப்பார்கள். சில பேர் வீடுகளில் இந்த சம்பிரதாயத்தை செய்யும்போது சாப்பாட்டை வைத்த உடன் எங்கிருந்தோ காகம் பறந்து வந்து அந்த சாப்பாட்டை எடுத்துச் செல்லும். இப்படி இறந்தவர்கள் வீட்டில் சாதம் வைத்த உடன், காகம் வந்து எடுக்கின்றது என்றால் அந்த இறந்த ஆத்மா சாந்தி அடைந்து விட்டது. இறந்த ஆத்மா பரிபூரணமாய் நல்ல ஆத்மாவாக முக்தி அடைந்து விட்டது என்று அர்த்தம்.
சில பேர் வீடுகளில் இப்படி சாதம் வைக்கும் போது, அந்த காகம் வந்து எடுக்கவே எடுக்காது. மேலே காகம் அங்கும் இங்கும் ஆக பறந்தாலும், அந்த சாப்பாட்டை உண்ணுவதற்கு காகம் வரவே வராது. இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் நிச்சயமாக இறந்தவர்கள் செய்த பாவங்கள் தான் இதற்கு காரணம். இப்படி மேலே பறக்கும்போதே சாதம் வைப்பவர்களை பற்றிய இறந்த காலத்தை, நிகழ்காலத்தை எதிர்காலத்தை ஆராய கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு. யார் வைத்த சாதத்தை எடுக்க வேண்டும். யார் வைத்த சாதத்தை எடுக்கக் கூடாது என்பதை காகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இப்படி எல்லா விஷயங்களும் தெரிந்த இந்த உயிரினத்திற்கு தினமும் மனதார சந்தோஷத்தோடு காலை எழுந்தவுடன் உங்களால் இயன்ற உணவை வைத்து வாருங்கள்.‌ உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள். செய்த கர்மாவும் படிப்படியாக குறையும். என்னால் இந்த சாப்பாடு வைக்க முடியவில்லை, அந்த சாப்பாடு வைக்க முடியவில்லை என்ற கஷ்டப்படாதீங்க.
ஒரு மிக்சர், ஒரு பிஸ்கட் என்று எந்த உணவை நீங்கள் வைத்தாலும் உங்கள் மனம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வைத்த உணவை தினந்தோறும் அந்த காகம் வந்து சாப்பிடும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
இது வெறும் காக்கா தானே மற்ற பறவைகள் போல இதுவும் ஒரு ஜீவராசி என்பவர்களுக்கு மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மூடநம்பிக்கையாக தெரியும். காகத்தை சனி பகவானின் வாகனமாக பார்த்து, அதை நம் முன்னோர்களாக நினைத்து சாஸ்திரம் சம்பிரதாய முறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயங்களை நம்பி பின்பற்றும் போது உங்களுக்கு தானாக நல்லது நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal