
இலங்கையில் விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான இரண்டு சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களின் இருப்புக்களிலும் தற்போது சிலிண்டர்களின் எண்ணிக்கைகுறைந்து வருகின்றன.
ஆரம்பத்தில் அந்த நிறுவனங்கள் கோரிய 650 ரூபா விலை அதிகரிப்பை அரசாங்கம் வழங்கவில்லை. இந்த நிலையில் கேள்வி அதிகரித்தால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கச் செய்வதற்கே மேற்படி இரண்டு நிறுவனங்களும் முயற்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை தற்போதும் சந்தையில் கேஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.