
அப்பிள்:
உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், தினமும் கட்டாயமாக ஆப்பிளை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை:
எலுமிச்சையை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.
பேரிக்காய், உலர் திராட்சை, கிவி:
இந்த பழங்களிலும் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்கும் தன்மை மிக அதிகம். இந்த உணவுகள் இரத்தத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்
பப்பாளி, தர்பூசணி:
இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த பழங்களில் விட்டமின்களும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளது. செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். குடலை சுத்தம் செய்யும்.
குடைமிளகாய்:
குடைமிளகாயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் அதிகம் உள்ளது. இது நம்முடைய உடலில் ஒக்சிஜன் அளவை கடகடவென உயர்த்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல், சூரை, சால்மன்
இவை போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உடலின் ஒக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்வதில் கடல் உணவுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.
தானியங்கள்:
அன்றாட உணவில் தானியங்களை ஒருவர் சேர்த்து வந்தால், நிச்சயம் அவர்களது உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பருப்பு வகை:
பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்கச் செய்யும். அதோடு நமக்குத் தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவையும் கிடைக்கின்றன.