
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், யாழ். மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.