
புத்தாண்டு வருகிறதென்றால் முதல் நாள் இரவில் நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து மது அருந்துவதும் உல்லாசமாக இருப்பதும்தான் புத்தாண்டு கொண்டாட்டம் என்று ஆகி விட்டது.
இப்போதெல்லாம் இதில் இளம் பெண்களும் கூட கலந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள்.
இரவு முழுக்க நகர வீதிகளில் கத்திக் கொண்டே செல்வதும், இதற்கு முன்பு ஏதோ கஷ்டத்திலிருந்து அந்த இரவில் அது அப்படியே விடுபட்டுப் போய்விட்டதாகவும், அடுத்த நாளே அவர்கள் எதையாவது சாதித்து விடப்போவதாக்வும் நினைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இந்தப் புத்தாண்டுப் பிரியர்களைப் பொறுத்தவரை அதிகமானவர்கள் நிரந்தரக் குடிகாரர்கள்தான். அன்று ஒரு நாளாவது குடிக்காமல் இருக்கலாம்.
ஆனால், இவர்கள் புத்தாண்டுக்கு முந்தைய நாளிரவில் அவ்வப்போது மது அருந்தும் சிலரையும் கூட்டணி சேர்த்து அட்டகாசம் செய்கிறார்கள்.
அன்றைய இரவை போதையில் மூழ்கிக் கழிக்க விரும்புகிறார்கள். இதனால் பொதுமக்கள் பலரும் அவதிப்படுகிறார்கள்.
நம் செயல் பிறரைப் பாதிக்காமலும் துன்பமளிக்காமலும் இருக்க வேண்டும் என்பதை முதலில் இவர்கள் உணர வேண்டும்.
இரவு முழுவதும் போதையில் இருப்பதுதான் புத்தாண்டு என்கிற பாதையில் போய்க் கொண்டிருக்கிறது “புத்தாண்டு கொண்டாட்டம்” என்கிற பெயரிலான கிறுக்குத்தனம் நிறுத்தப்பட வேண்டும்.
தவறான பாதையில் செல்லும் இந்த இளம் கூட்டம் தங்கள் கிறுக்குத்தனமான நிலையில் இருந்து வெளியே வர முயல வேண்டும்.