எழுதியவர் – மகிழன்.

தெரு நாய் ஒன்று வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற மழை நீர் போற கால்வாய்ல குட்டி போட்டு வைச்சிருந்தது….
இன்னைக்கு காலையில எதிர்பார்க்காத அளவு மழை..
எதேச்சையா வெளிய பார்க்லாமே என்று பாத்துட்டு இருந்தேன்…ஆமா…. அப்போ தான் ஞாபகம் வந்தது..’அந்த நாய் குட்டி போட்டது, ஐயோ….. என்ன ஆச்சோன்னு’
ஓடிப்போய் பார்த்தேன். அதுங்க எல்லாம் ஒரே கத்தல். தண்ணில மூழ்கி கத்துதுங்க..
தாய் நாய்க்கு என்ன செய்றது தெரியாம ஓனு ஒரே அழுகை.
முட்டி தண்ணில இறங்கி கத்தி கூப்பிட்டேன். என்னை பார்த்து குறைச்சது. நான் குட்டிகள எதும் செஞ்சிடுவேன்னு பயத்துல. பத்து நிமிஷம் செய்றது தெரியாம முளிச்சிட்டு நின்னேன்.
தாய் நாய் ஒரு குட்டிய மட்டும் கவ்விட்டு வந்து எங்க வீட்டு ஷெட்டுல வச்சிட்டு ஒரே அழுகை…..
எனக்கும்….
யோசிக்காம பெரிய ட்ரே எடுத்துட்டு அந்த சுரங்கத்துக்குள்ள போனேன்.எல்லா குட்டிகளும் தண்ணில மூழ்கி ஒரே கத்தல்.அப்போ தான் தெரிஞ்சது,அவ தூக்கிட்டு போனதோட மொத்தம் ஆறு குட்டிகள் என்று.
கால் மணிநேரத்தில தூக்கிட்டு வந்து வீட்டு ஷெட்ல தாய் கிட்ட வச்சேன்.அதுக்கு ஒரே அழுகை.
கிட்ட வந்து எல்லாத்தையும் பார்த்து சந்தோஷத்தில வாலை ஆட்டியபடி கொஞ்சி விளையாடியது.
அப்போ பாத்து, வீட்டுக்குள்ள இருந்து ஒரு குரல், வேறயாரும் இல்ல…என்னோட தாய் தான்
‘சளி பிடிக்கும் மழைல என்ன ஆடிட்டு இருக்கன்னு திட்டினா, குடை கூட இல்லாம நனைஞ்சி தொலையாதன்னு’ ….. இவளுக்கு இவ பிள்ளை மேல பாசம்.
அவளுக்கோ அந்த ஆறு பிள்ளைகள் மேல பாசம்…..
சந்தோஷத்துல வீட்டுக்குள்ள போனா எப்பிடி நனஞ்சிருக்கான் பாரு, இதை சொல்லிட்டு
அப்புறம் சொன்ன டயலாக் தான் செம்ம.
“பாழ போன மழை இப்போதான் வரணுமானு”
‘நல்லா தலைய துடைடா…, சளி பிடிக்கும்னு’ சொல்லிட்டு ‘ மாடு மாதிரி வளந்திருக்க கொஞ்சம் கூட அறிவே இல்லைனு வேற திட்டு.
‘யம்மோவ்வ் போமா காலைல திட்டாத’
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…..
பின்குறிப்பு:
இரண்டு தாய்,ஏழு சேய்களும் நலம்….
மகிழன்.