லெனின் எழுதிய ” அரசும் புரட்சியும் ” என்ற நூலிலிருந்து..

கம்யூனிச சமுதாயத்தின்
” வளர்ச்சி ” என்ற துறையில் மார்க்ஸ் அதிக கவனம் செலுத்தினார்.
“வளர்ச்சித் தத்துவத்தை அதன்- முரணற்ற,
முழு நிறைவான,
தேர்ந்து ஆய்ந்த
சாரமிக்க பொருள் வடிவில்——-
நவீன முதலாளித்துவத்தின் ஆய்வுக்காகக் கையாள்வதே
மார்க்ஸின் தத்துவம் அனைத்தும்.
இயற்கையாகவே இந்தத் தத்துவத்தை
முதலாளித்துவத்தின்
” வரப்போகும்” வீழ்ச்சி,
” வருங்காலக் ” கம்யூனிசத்தின்
” வருங்கால வளர்ச்சி “
ஆகிய இரண்டிலும் கையாளப்படவேண்டிய
பிரச்சினை மார்க்ஸின்முன் எழுந்தது.
அப்படியானால்,
எந்த ” உண்மைகளை” அடிப்படையாகக் கொண்டு
வருங்காலக் கம்யூனிசத்தின்
வருங்கால வளர்ச்சி குறித்துப் பரிசீலிப்பது?
கம்யூனிசமானது
முதலாளித்துவத்திலிருந்து தோன்றுவதாகும்.
வரலாற்று வழியில்
முதலாளித்துவத்திலிருந்து
வளர்வதாகும்.
முதலாளித்துவம். “பெற்றெடுத்த”
ஒரு சமுதாய சக்தியின் செயலால் விளைந்த பலனாகும்.
என்ற இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான்
இப் பிரச்சினையைப் பரிசீலிக்க முடியும்.
*
கற்பனைப் படைப்பை உருவாக்கும் முயற்சியினை,
தெரிந்துகொள்ள முடியாத ஒன்றைப் பற்றிய
பயனற்ற ஊகங்களில் இறங்கும்
முயற்சியினை
மார்க்ஸிடம்
இம்மியளவும் காண முடியாது.
உதாரணமாய்
ஒரு புதிய உயிர் வகை குறிப்பிட்ட இந்த வழியில்தான் தோன்றியது,
திட்டவட்டமான
இந்தத் திசையில் தான் மாறுதலடைந்து வந்தது
என்பது தெரிந்ததும்,
உயிரியல் விஞ்ஞானி ஒருவர் இந்த உயிர் வகையின் வளர்ச்சியைப் பற்றிய பிரச்சினையை எப்படி ஆராய்வாரோ
அதே முறையில்தான்
மார்க்ஸ்
கம்யூனிசத்தைப் பற்றிய பிரச்சினையை ஆராய்ந்தார்.
அரசுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள பிரச்சினையை அவர் இவ்வாறு எழுதுகிறார்.
“…… இன்றைய சமுதாயம் முதலாளித்துவ சமுதாயம்.
நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் இச் சமுதாயம் இருந்து வருகிறது.
அதிகமாகவோ, குறைவாகவோ
மத்திய காலக் கூறுகளின்
கலப்படத்திலிருந்து விடுபட்டதாகவும்,
அந்தந்த நாட்டின் தனிப்பட்ட வரலாற்று வளர்ச்சியால் அதிகமாகவோ குறைவாகவோ பாதிக்கப்பட்டதாகவும்,
அதிகமாகவோ குறைவாகவோ
வளர்ச்சியுற்றதாகவும் இருந்து வருகிறது.
மறுபுறத்தில்
” இன்றைய அரசு”
அந்தந்த நாட்டு எல்லையைக் கடந்ததும் மாறிவிடுகிறது.
இது ஆஸ்திரேலியாவில் இருப்பதிலிருந்து
ஜெர்மன் நாட்டில் மாறுபட்டதாயும்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருப்பதிலிருந்து
இங்கிலாந்தில் மாறுபட்டதாயும் உள்ளது.
ஆகவே,
” இன்றைய அரசு ” என்பது
ஒரு கற்பனையே ஆகும்.
தொடர்கிறது…………….
அன்புடன்
சண்முகம் சுப்பிரமணியன்.