பிள்ளைகளை ஏற்றிச்செல்ல காத்திருக்கும் பெண்கள் இருவரின் சுவாரஷ்யமான உரையாடல்!!

வதனா : என்ன தேன்மொழி, நேற்று ஆளைக்காணேல்ல, மகள் உங்கட அப்பாவோட வந்தவா போல…

தேன்மொழி : ஓம் அக்கா, நேற்று ஆர்ப்பாட்டம் எல்லே நடந்தது, அதுக்குப் போயிற்றன்.

வதனா : என்ன ஆர்ப்பாட்டம்?

தேன்மொழி : அதுதான் அக்கா, உந்த நுண்நிதிக்கடனை நிப்பாட்டவேணும் எண்டுதான்….

வதனா : ஓ….ஓமோம்….நானும் செய்தியில பாத்தன்….

தேன்மொழி : உந்த நுண்நிதிக் கடனால எவ்வளவு பாதிப்பு தெரியுமே…அதுவும் பெண்களுக்குத்தான் அக்கா….

வதனா : உண்மைதான்….நீங்களும் எடுத்திருக்கிறியளோ தேன்மொழி?

தேன்மொழி : இல்லை அக்கா, நான் எடுக்கேல்ல, ஆனா எங்கட பெண்களுக்காக குரல் கொடுக்கவேணுமெண்டுதான் போனன்.

வதனா : உந்த தனியார் கம்பனிகளின்ர வேலைதான்….

தேன்மொழி : எங்கட சனத்தையும் சொல்லவேணும்….கடனெண்டா உடன எடுத்திட வேண்டியது, பிறகு கட்ட வழியில்லாம தற்கொலை, சாவு எண்டு போறது…

வதனா : அவையளைச் சொல்லியும் குற்றமில்லை தேனு, ஏனெண்டா, இப்ப இருக்கிற பொருளாதார கஸ்ரத்தில காசு கிடைச்சா சனம் வாங்கத்தான் செய்யும்…..

தேன்மொழி : அதுவும் சரிதான் அக்கா, பொருட்களின்ர விலை என்ன கொஞ்ச நஞ்சமே…..

வதனா : ஆயிரம் ரூபாவுக்கு ஒரு சின்ன சொப்பினில தான் பொருளுகள் வாங்கமுடியும்….

தேன்மொழி : என்னத்தை வாங்கி, எப்பிடிச் சீவிக்கிறதோ…..அதனாலதான் சனம் கடனெண்டாலும் வாங்கிறது…

வதனா : உண்மைதான், வாங்கோ அக்கா, பிள்ளையளை விட்டாச்சு…..

இருவரும் நடந்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal