
கொரோனாவின் புதிய அறிகுறிகள் தொடர்பில் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வாய் , உதடு வறண்டு போவது வெடிப்பு மற்றும் கட்டிகள் ஏற்படுவதும் கொரோனா அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காய்ச்சல், தலைவலி, மூச்சத் திணறல் என கொரோனா அறிகுறிகள் சொல்லப்பட்டு வந்தன.
சர்வதேச சுகாதாரக் குழுவினர் தற்போது நடத்திய புதிய ஆய்வில், கொரோனா வைரஸ், வாய்ப் பகுதியில் இருக்கும் செல்களை கடுமையாக பாதித்து, அதனால் வாய் மற்றும் உதடு வறண்டு போதல், சுவை அறியும் திறன் குறைவது மற்றும் உதடு வெடிப்பு அல்லது கட்டிகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆய்வு முடிவுகளுக்கு கர்நாடக சுகாதாரத் துறையினரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அத்துடன் இந்த ஆய்வு முடிவுகள் மார்ச் 25-ஆம் தேதி வெளிவந்த இயற்கை மருத்துவம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. வாய்ப்பகுதியை தாக்கும் கொரோனா வைரஸ் மூலம், ஒரு மனிதனின் செரிமானப் பகுதி மற்றும் நுரையீரலுக்கும் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.