
இன்று யாழ்ப்பாணத்தில் இருவர் கைகககககதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையில் பிரச்சாரப்படுத்த முயற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பெண் ஒருவரும், ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அதிரடியாக யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றை முற்றுகையிட்டபோது, குறித்த இருவரும் கைதாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சமூக வலைத்தளமான யூடியூப் மற்றும் முகநூலில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.