
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் புத்தூர், வாதரவத்தை பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் முன்பகை காரணமாகவே நடந்ததாக தெரியவருகின்றது. சம்பவத்தில் துரைராசா சந்திரகோபால் (52) என்ற கூலித்தொழிலாளியே வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.