
நேற்று மாலை இலங்கையின் தெற்கே முச்சக்கரவண்டி எரிந்து கருகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பெலியத்தையில் இருந்து மருதானை சென்ற ரயில் ஒன்றுடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்துருவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை குறித்த முச்சக்கர வண்டி கடந்துசென்றபோது திடீரென வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முச்சக்கரவண்டியை மோதித் தள்ளியது. இதனால் முச்சக்கர வண்டி தீ பிடித்து எரிந்துள்ளது.
எவ்வாறாயினும் வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.