
அடுத்த மாதம் 17 ஆம் திகதி புத்தாண்டுக்காக தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பேலியகொட வித்யாலங்கா பிரிவெனாவில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவிருப்பதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இம்முறை புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.