
வடமாகாண சுகாதாரத் திணைக்களமும், யாழ்.போதனா வைத்தியசாலையும் இணைந்து எதிர்வரும் மே மாதமளவில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
ஆகையால் கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்கள் தத்தமது பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலைகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, மாங்குளம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகளில் அல்லது யாழ் போதனா வைத்தியசாலையில் பதிவுகளை மேற்கொள்ளவதன் மூலம் கண்புரை சத்திரசிகிச்சையினை செய்துகொள்ள முடியும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.