
யாழ்நகர் வீதியால் மோட்டார் வாகனத்தில் பயணித்த பொன்னாலை சித்தி விநாயகர் ஆலயத்தின் அர்ச்சகரும் பண்டிதருமான 77 வயதுடைய பொன்னம்பலவாணர், கடந்த சனிக்கிழமை இராணுவத்தினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.
படுகாயமடைந்த அவரை இராணுவத்தினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
ஊரில் ஒரு சிறந்த கல்விமானாகவும் பேரறிஞராகவும் மனிதநேயப் பண்பாளனாகவும் விளங்கிய இவரின் இழப்பு பொன்னாலை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும். இவரின் மரணம் மக்களின் மனதில் பெரும் துயரைக்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.