சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவகங்களின் உணவு விலையும் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, எரிவாயு விலைக்கு ஏற்ப உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து நாளை (05) அறிவிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவு விலை குறைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், உணவுப் பொருட்களின் விலையை கட்டாயம் காட்சிப்படுத்த வர்த்தக அமைச்சர் முடிவு செய்துள்ளார். அதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாளை முதல் இந்நாட்டில் குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயம் அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Subscribe
Login
0 Comments