இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘சமீபத்தில்இ தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளது .அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் அதிர்வுகளால் மேல் மாகாணத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிச்சயம் பாதிக்கப்படலாம். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்படுவதால்இ அந்த பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்கள் சேதமடையலாம். எனவேஇ இலங்கையில் உள்ள புதிய மற்றும் பழைய கட்டிடங்களைஇ குறிப்பாக உயரமான கட்டிடங்களை வகைப்படுத்துவது நாம் செய்ய வேண்டிய ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டிடங்கள் பூமியின் புவியியல் நிலைமைகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா என்பதை நாம் அடையாளம் காண வேண்டும் . நிலநடுக்கங்களுக்கு ஏற்றவாறு அந்த கட்டிடங்களின் அடித்தளம் சரியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும் . அந்த ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டுஇ சில சமயங்களில் அவற்றைச் சரிசெய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. பழுதுபார்க்க முடியாத கட்டிடங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தல் அல்லது அந்த கட்டிடங்களைபாவனையில் இருந்து அகற்றுதல் போன்றவற்றின் மூலம் ஆபத்தான சூழ்நிலையை தவிர்க்கலாம். அந்த நிலை குறித்து இலங்கை இப்போது கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.