நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
பாடசாலை தவணை நாளை ஆரம்பமாவதையிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.