சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். 

இதற்கிடையே வியாழன் கோளின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ரொக்கெட் ஏவப் படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 

இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ரொக்கெட் ஏவப்படுகிறது.

ரொக்கெட் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் அதிலிருந்து விண்கலம் பிரியும். அது 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும். பின்னர் வியாழன் கிரகம் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை கண்காணிக்கும். 

குறிப்பாக வியாழனின் நிலவில் புதையுண்ட கடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் இந்த விண்கலம், வியாழனின் வளிமண்டலம், அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், கலவைகள் மேற்பரப்புகள் மற்றும் பரந்த வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு செய்யும்.

வியாழனில் பல மாதங்கள் சுற்றும் விண்கலம் இறுதியாக கேனிமீட் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். விண்கல் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படும். 

அதி நவீன கருவிகள், வியாழனின் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதற்கு ஒரு ரேடார் ஒலிப்பான் உள்ளிட்டவை உள்ளன. ஆய்வில் குறிப்பாக கேனிமீட் நிலவில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்படும். 

இது குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, சூரிய குடும்பத்தில் உயிர்கள் தோற்றம் நமது பூமிக்கு தனித்தன்மை வாய்ந்ததா? அல்லது சூரிய குடும்பத்தில் அல்லது அதற்கு அப்பால் வேறு எங்காவது நிகழுமா? என்று ஆய்வு செய்யப்படும் என தெரிகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal