
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி,. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
நிதிப்பற்றாக்குறை காரணமாக மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.