
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலைக் குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்,
காய்ந்த மிளகாய் 1கிலோ – ரூ.1,700
வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169
சிவப்பு அரிசி 1 கிலோ – ரூ.179
வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184
சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365
கீரி சம்பா 1கிலோ – ரூ.235