
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நுழைந்து தீவின் குறுக்காக பயணிகின்றது.
நாடு முழுவதும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.