
உக்ரைனுடன் நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை வழங்குவதாக பைடன் உறுதியளித்தார்.