
வவுனியா பூம்புகாரில் மாடுகளுக்கு விசம் வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால், பதினேழு கால்நடைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவற்றில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வவுனியாவில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
கால்நடைகள் நெல்லைச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த நபர் மாடுகளுக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என மாடுகளின் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் திங்கட்கிழமை காலை அச் சந்தேக நபரைத் தேடிச் செல்கையில் அவர் தப்பி சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.