Month: February 2022

உயிர்க்கொல்லி HIV-யில் இருந்து விடுதலையான முதல் பெண்!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிர்க்கொல்லி நோயான ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து முற்றிலும் குணமடைந்து இருக்கும் தகவல் மருத்துவத் துறையில் புது உற்சாகத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மனிதனின் நோய் எதிர்ச்சி சக்தியை முற்றிலும் குறைத்து பின்னர் உயிரைக்…

உலக நாடுகளிடம் செல்லவுள்ளார் பேராயர்!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி வணக்கத்திற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மனித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்னும் சில தினங்களில் வத்திகான் சென்று, பரிசுத்த பாப்பரசரை சந்திக்க…

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!

சாரதி பயிற்றுனர்கள் மற்றும் உதவி ஓட்டுநர் பயிற்றுனர்களை பதிவு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை 2022 ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற உள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அறிவிப்பு 28.01.2022 திகதியிட்ட 2265 ஆம்…

7 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை- உடப்புஸ்ஸல்லாவயில் சம்பவம்!!

நேற்று (19) மாலை உடப்புஸ்ஸல்லாவ நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும்…

தடுப்பூசிகளைத் தடுக்கும் 8 மர்ம கும்பல் – இலங்கை புலனாய்வு பிரிவு ஆராய்வு!!

அரசாங்க புலனாய்வு பிரிவு இலங்கையில் கோவிட் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி பெறுவதை தடுத்த மற்றும் தடுப்பூசி பற்றிய கட்டுக்கதையை பரப்பிய எட்டு குழுக்கள் மீது ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தக் குழுக்களில் பல்வேறு தீவிரவாத மதக் கோட்பாடுகளைக் கொண்ட மூன்று…

மகன் குறித்த சச்சினின் உருக்கமான பதிவு!!

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சச்சினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதையடுத்து 15 ஆவது சீசனுக்கான போட்டியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் தனது மகன்…

பெற்றோலுடன் பாரிய கப்பலொன்று இலங்கை வருகை!!

37,000 மெற்றிடக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளதாக, வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், நாளைய தினம் 37, 500 மெற்றிக்…

மின்சாரக் கசிவினால் மேல்மாடி முழுமையாக எரிந்து சேதம்!!

கம்பகா, றத்தொழுகமவில் மின்சார கசிவால் மேல்மாடி முழுமையாக சேதமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. கிட்டத்தட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் போலியான நேர அட்டவணை சமூக இணையத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழுக்கு விஜயம் செய்துள்ளார் ரோஸி சேனாநாயக்க!!

கொழும்பு மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியவற்றுக்கு இடையில், நகர இணைப்புத் திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக, இன்று அவர் யாழ்ப்பாணத்திற்கு…

SCSDO's eHEALTH

Let's Heal