Month: March 2021

பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் நேர்ந்த விபத்து!!

தலைமன்னாரில் இடம்பெற்ற விபத்திற்கான காரணம் வெளியானது. விபத்து நடைபெற்ற குறித்த நேரத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரதக் கடவைக்கான தடை, குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரியவருகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களின் மத்தியின் பேரதிர்ச்சியை உண்டு…

அசாத் சாலியின் வாகனத்தில் இருந்து துப்பாக்கி மீட்பு!!

நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட அசாத்சாலியின் வாகனத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றவிசாரணைப்பிரிவினரின் சோதனையின் போது இத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டத்தில் மற்றொரு பாடம் இணைப்பு!!

இலங்கையில் பாடசாலை பாடத்திட்டங்களில் சட்டம் என இன்னொரு பாடத்திட்டம் இணைப்பது பற்றிய அனுகூலங்களை ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  8 பேர் கொண்ட குழுவில் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூஃப் ஹக்கீம், எஸ்.ஸ்ரீதரன், வீரசுமண வீரசிங்க,சாகர கரியவாசம், அமரகீர்த்தி…

இளம்பெண்ணொருவர் சாவகச்சேரியில் தற்கொலை!!

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர் யுவதிகளின் தற்கொலை என்பது வடபகுதியில் அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. இளைய சமுதாயத்தினரின் இத்தகைய…

நிறைவடைந்தது வீதிப்பணி!!

வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கின்ற AB31 நீள் சாலைக்கான (புலோலி – கொடிகாமம் – கச்சாய் விதி) காப்பற் செப்பனிடும் பணிகள் கொடிகாமத்தில் முடிவு நிலையை அண்மித்துள்ளன. இந்திய நிறுவனம் ஒன்றால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதிக்கான செப்பனிடும் பணிகள்…

இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

இரண்டு ஆண்டுகளுக்குள் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் பணிகளை நிறைவுசெய்யுமாறு ஆட்பதிவு திணைக்களத்திற்கு பணித்துள்ளார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.  இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் மீண்டும் பதிவு செய்யப்படுவார்கள்.மேலதிகமாக, கைரேகைகள் மற்றும் முக அம்சங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகளும்…

மீண்டும் ஆரம்பமாகும் பயணக்கட்டுப்பாடுகள்!!

பண்டிகை கால பயண நெருக்கடிகளை கருத்தில்கொண்டு மீண்டும் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவின் நடவடிக்கையால் கோபத்தில் இலங்கை!!

இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட பிரேரணை வரைவு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். “இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இவ்வாறானதொரு பிரேரணைக்குப் பிரிட்டன் தலைமை தாங்குவது, ஒரு…

அதிகரித்தது அமெரிக்க டொலரின் பெறுமதி!!

மெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.06 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 195.28 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றய நிலவரப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை…

மட்டக்களப்பிலும் மியன்மார் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!!

மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர், பொதுமக்கள், சமூகஅமைப்பினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

SCSDO's eHEALTH

Let's Heal