
60 வயதிற்கு மேற்பட்ட 25 000 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்ற போதிலும் அரச சேவையில் பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசாங்க பணியில் வீழ்ச்சியடையும் என பெரும்பாலான அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும், அரச சேவையின் செயற்பாட்டிற்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது எனக்கூறப்பட்டுள்ளது.