உணவுப் பயிர்களுக்கு பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்ணய விலை முறைமையினால் இந்நாட்டு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.விவசாயிக்கு நியாயமான விலையைப் பெறுவதற்கு உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது நிலையான கொள்முதல் விலையுடன் கூடிய முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
Subscribe
Login
0 Comments