சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சொகுசு பங்களாவின் முன்பு தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபாயவின் கட்சியின் உறுப்பினர் என்ற ஆதாரங்கள் வெளிவந்துள்ளது.
0002113531 என்ற இலக்கத்தை உடைய பொதுஜன பெரமுன அங்கத்துவ அட்டையை அந்த இளைஞன் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது
அத்தோடு கொல்லப்பட்டவரின் மரணப் பரிசோதனை புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், அந்த இளைஞன் அருகில் வைத்து தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதைக் காண முடிகின்றது.
‘இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலையா’ என்கின்ற ரீதியில் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய அதேவேளை, இந்தப் படுகொலையில் கௌரவ இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரனுக்குச் சம்பந்தம் இருக்கின்றதா என்கின்ற ரீதியிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.


