
யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் சற்றே ஓய்ந்துள்ளதென மக்கள் நிம்மதியடைந்திருக்க, அண்மையில் பண்ணாகம் கிராமத்தில் நுழைந்த ஆவா குழுவினரை அக்கிராம மக்களும் இளைஞர்களும் இணைந்து நையப்புடைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இப்படியான பாடம் புகட்டல்கள்தான் இக்குழுக்களை அடக்கி ஒடுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.