
வவுனியா நகரில் உள்ள 5 விற்பனை நிலையங்களில் இரவோடு இரவாக திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களுக்குச் சென்ற திருடர்கள், மேற்கூரை ஓடுகள் மற்றும் கதவுகளை உடைத்து அங்கு மறைத்து வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள், இன்று காலை மீண்டும் திறக்க வந்தபோது, கடைகள் திறந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் கடைகளில் இருந்து பல இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.