சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் இல் அமைந்திருக்கும், ” கலாநிதி அன்னலக்‌ஷ்மி சின்னத்தம்பி ஞாபகார்த்த இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம்” என்கிற சேவையை வாழ்வகம் என்ற அமைப்பை நிறுவி சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

அவர்களது 1வது செயல்திட்டம்
வறுமையில் இருக்கும் வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்குதல்..

இவர்களை அணுகும் மாணவர்கள் அவர்களது பாடசாலை அதிபர் உறுதிப்படுத்திய கடிதத்துடன் தொடர்பு கொள்ளவேண்டும். வசதியற்ற பாடசாலை செல்லாத மாணவர்கள் தமது கிராம சேவகர் உறுதிப் படுத்தலுடன் அணுகவேண்டும்.

மேலும் இதை நடாத்தும் தலைவர் ஆ.ரவீந்திரன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் மேலும் அவர்களது சிறப்பான மனித நேய செயல்திட்டம் ஒன்றை குறிப்பிட்டார்.

அதாவது விழிப்புலன் முற்றாக அற்ற, அல்லது பாததூரமான விழிப் பிரச்சனை, பார்வைக் கோளாறு உள்ள வசதி அற்ற / வசதி உள்ள பிள்ளைகள் முற்றிலும் இலவசமாக அவர்களுடன் தங்கி( ஒரு சுயமான
பிரஜையாக வரும் வரை) படிப்பை தொடர முழு வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இதைக் கேட்டு நான் அகமகிழ்ந்து, பிள்ளைகளை தம்முடன் தங்கவைத்து இலவசமாகப் பராமரிப்பதன் நோக்கம் என்னவென்று கேட்டேன்.

அவர் கூறினார்…..
விழிப்புலன் அற்ற பிள்ளைகள், இயல்பாகவே அவர்களை அறியாமலேயே மனரீதியாகப் பாதிக்கப் பட்டிருப்பர். சமூகத்தை சந்திக்கத் தயங்குவர்.

அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கல்வியானது, அவர்களது மனநிலை உயர்ச்சி பெறவும், இச்சமூகத்தில் சகமனிதரைப் போல இணைந்து வாழவும் பயிற்சி கொடுக்கப் படவேண்டும். அதனால்தான் இந்தப் பணியினை மேற்கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

மிகவும் நிறைவான சேவை உறவுகளே….! இலங்கையின் எப்பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு…..
021 22 40146
021 22 40239
+94 768286331

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal