
கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்ட யாழ் நகர்ப்பகுதி வர்த்தகர்கள் பணியாளர்களிற்கான பிசிஆர் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களையும் இப்பரிசோதனையில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பலர் குறித்த பகுதிக்குச் சென்று பிசிஆர் பரிசோதனைக்காக முண்டியடித்து காத்திருக்கின்றனர்.