
யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு முடக்கப்பட்டுள்ளது எனினும் வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்ட்டுள்ளது. யாழில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும்.