மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து மொத்தம் 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட இவர்கள், சுமார் 11 மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி செல்லும் நோக்குடன் படகில் பயணித்த *இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே* இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

எட்டு பெண்கள் மற்றும் 30 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட மொத்தம் 440 பேர் தற்சமயம் GeoBarents கப்பலில் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் MSF தொண்டு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளைத் திங்கட்கிழமை இத்தாலியக் கடலோரக் காவல்படை ஹெலிகொப்டர் மூலம் லம்பெடுசா தீவுக்கு அருகில் 32 புலம்பெயர்ந்தோரை மீட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal