
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்குள் இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள்மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கொழும்பின் அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.