
இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிடைக்கும் தரவுகளுக்கு அமைவாக, நாட்டில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தேவைப்பட்டால் மாத்திரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் பெரும்பாலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.