
நேற்று (வியாழக்கிழமை) இரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பயணத்தடை எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வருகின்றவர்களை எச்சரித்து, திருப்பி அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனியா பகுதியிலுள்ள அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.