
முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் நீராடியபோது காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் நேற்றும் மற்றொருவரின் சடலம் இன்று காலையிலும் மீட்கப்பட்டன.
இந்நிலையில் மூன்றாவது நபரின் சடலத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த மூவர் நேற்று மாலை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
முல்லைத்தீவு கடலில் மாயமான 2வது நபரின் சடலமும் மீட்பு