
முகஅழகு என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. செயற்கை முறையிலான அழகுப் பராமரிப்புகளை விட இயற்கையான பராமரிப்பு முறைகளே உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. இயற்கையான சருமப் பராமரிப்பு முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
- அரிசி களைந்த நீர்:-
தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். - வெள்ளரிக்ககாய் :
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும். - முகத்தை கழுவுதல் :
தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும். - ஆவிப் பிடித்தல் :
சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவிப் பிடிப்பது மிகவும் நல்லது, இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது, இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும். - தயிர் :
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும். - எலுமிச்சை :
கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர எலுமிச்சை மிகவும் உதவி செய்கின்றது, அதாவது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தயிர் கலந்து தலைக்கு மசாஜ் செய்து, பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலை சுத்தமாக காணப்படும். மேலும் பொடுகு தொல்லை நீங்கும், அதேபோல் முடி உதிர்வு பிரச்சனை தடுக்கப்படும்.